இந்தியா

எங்களை ஜாதிரீதியாக அவமானப்படுத்துகிறார்: பெண் ஆசிரியர் மீது தலித் மாணவர்கள் போலீசில் புகார்

IANS

ரே பரேலி; எங்களை ஜாதிரீதியாக அவமானப்படுத்துகிறார் என்று உத்தரபிரதேசத்தில் பெண் ஆசிரியர் மீது தலித் மாணவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டம் ஜகத்பூர் தாலுகாவில் அமைந்துள்ளது ஷங்கர்பூர். இங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு பணிபுரியும் தற்காலிக பெண் ஆசிரியர் ஒருவர்தான் அங்கு பயிலும் தலித் மாணவர்களை ஜாதிரீதியாக அவமானப்படுத்தும் வகையில் நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அங்கு பயிலும் தலித் குழந்தைகள் ஒன்று சேர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வப்னில் மம்கெய்ன் அலுவலகத்த்திற்குச் சென்று புகார் அளித்தனர். காயடுத்து அவர் துணை காவல்துறை ககாணிப்பாளர் வினீத் சிங் மூலம் அள்ளியில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுதெடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னில், 'இது மிக முக்கியமான பிரச்சினை. விசாரணை முடிவில் வழக்கு பதிவு செய்யபப்டும்' என்று தெரிவித்தார்.

பள்ளி பெண் ஆசிரியர் மீது மாணவர்களே போலீசில் புகார் அளித்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT