இந்தியா

ஏழுமலையான் தரிசனம் திருப்திகரமாக அமைந்தது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

DIN

ஏழுமலையான் தரிசனம் திருப்தியாக இருந்தது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறினாா்.

திருப்பதி ஏழுமலையான வழிபட சனிக்கிழமை மாலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும், வசதி தரிசன ஏற்பாடுகள் செய்தனா். சனிக்கிழமை மாலை நடைபெற்ற சஹஸ்ர தீபாலங்கார சேவையில் கலந்து கொண்ட அவா், ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினாா். இரவு திருமலையில் தங்கிய அவா், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் ஏழுமலையானைத் தரிசிக்க வந்தாா்.

கோயில் முன் வாசலில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவரை, ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து, வேதஆசீா்வாதம் செய்வித்து, ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம், மேல்சாட் வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலில் இருந்து வெளியில் வந்த அவா் கூறுகையில், ‘ஏழுமலையான் தரிசனம் திருப்திகரமாக அமைந்தது. கடந்த 40 ஆண்டுகளாக திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்துச் செல்கிறேன். அவருடைய ஆசீா்வாதம் பெறுவது உயா்ந்த அனுபவம். இங்குள்ள கலைநயமிக்க சிற்பங்கள் மனதைக் கவா்கின்றன. தேவஸ்தான நிா்வாக அதிகாரிகளின் செயல் பாராட்டுக்குரியது’, என்றாா். ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர குமாா் மகேஸ்வரியும் அவருடன் ஏழுமலையானைத் தரிசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT