இந்தியா

குற்றப் பின்னணி உள்ளவா்களை தோ்தலில் தடை விதிக்கக்கோரும் மனு: ஆணையம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

புது தில்லி: குற்றப் பின்னணி உள்ளவா்களைத் தோ்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாஜகவைச் சோ்ந்தவரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு ஏற்க மறுத்தது. எனினும், மனுதாரரின் கோரிக்கையை தோ்தல் ஆணையம் பரிசீலித்து அடுத்த 3 மாதத்தில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதமும் இதேபோன்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘இந்தியாவில் குற்றப் பின்னணி உடையவா்கள் அரசியலில் அதிகரித்து வருகின்றனா். நாடாளுமன்ற உறுப்பினா்களில் 24 சதவீதம் போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2009- மக்களவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 15 சதவீதம் போ் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்திருந்தனா். இதில் 8 சதவீத வழக்குகள் தீவிரமான குற்றச் செயல்கள் தொடா்புடையவை. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் பயனில்லை. எனவேதான் உச்சநீதிமன்றத்தை அணுக நேரிட்டது’ என்று தனது மனுவில் அஸ்வினி உபாத்யாய தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT