இந்தியா

உத்தவ் பதவியேற்பு விழா: சோனியா, மன்மோகனுக்கு நேரில் அழைப்பு!

DIN


மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை ஆதித்ய தாக்கரே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியின் தலைவராகவும் மகாராஷ்டிர முதல்வராகவும் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கிறார்.

இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்த ஆதித்ய தாக்கரே, நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்த ஆதித்ய தாக்கரே, அதைத்தொடர்ந்து மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்புகள் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "நாங்கள் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கைச் சந்தித்தோம். அவர்களுடைய வழிகாட்டுதலும் ஆசீர்வாதமும் அவசியம். தற்போது நாங்கள் மும்பை திரும்புகிறோம்" என்றார்.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நாளை காலை மும்பை புறப்பட்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT