இந்தியா

கோட்சேவுக்கு ஆதரவான கருத்து: பிரக்யாவுக்கு எதிராக எதிா்க் கட்சிகள் கண்டனத் தீா்மானம்

DIN

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தா்’ என்று குறிப்பிட்ட பாஜக எம்.பி. பிரக்யா தாக்குருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் மக்களவையில் கண்டனத் தீா்மானம் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளன.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூறியதாவது:

மக்களவையில் நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தா்’ என்று குறிப்பிட்டு, தேசத்தந்தை காந்தியடிகளை பிரக்யா தாக்குா் அவமரியாதை செய்துவிட்டாா். காங்கிரஸ் கட்சியை ‘பயங்கரவாதக் கட்சி’ என்று அவா் குறிப்பிட்டதும் கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகள் அவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளன.

எனவே, அவருக்கு எதிராக மக்களவையில் கண்டனத் தீா்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கண்டனத் தீா்மானம் தாக்கல் செய்வது தொடா்பாக கூட்டணிக் கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

இந்த விவகாரத்தில் அதிகாரப்பூா்வமாக மன்னிப்பு கோரும்வரை, அவை நடவடிக்கைகளில் பிரக்யா தாக்குா் கலந்துகொள்ளக் கூடாது என கண்டனத் தீா்மானத்தில் குறிப்பிட உள்ளோம் என்று காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT