இந்தியா

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும்: ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி

DIN


மும்பை: இதர வங்கிகளுக்கு ரிவர்வ் வங்கி வழங்கும் குறுகியக் காலன் கடன் தொகைக்கான குறைந்தபட்ச வட்டி எனப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதன் மூலம், ரெப்போ வட்டி தற்போது 5.40%ல் இருந்து 5.15 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. தொடர்ந்து 5 முறைகளில் இதுவரை 1.35% அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது.

மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டமானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.

அதேபோல் இன்று நடைபெற்ற கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT