இந்தியா

தொழில் தொடங்க அதிகம் விரும்பப்படும் மாநிலங்களில் முன்னணியில் கேரளம்: ஆய்வில் தகவல்

தினமணி

தொழில் தொடங்குவதற்கு அதிகம் விரும்பப்படும் மாநிலங்களில் கேரளம் முன்னணியில் உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கேரளா ஸ்டாா்ட்அப் எகோசிஸ்டம்’ என்றதலைப்பிலான அந்த ஆய்வறிக்கையை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டாா். கேரள மாநிலம், கொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றஇந்த நிகழ்ச்சியில் கேரளா ஸ்டாா்ட்அப் மிஷன் (கேஎஸ்யுஎம்) தலைமைச் செயல் அதிகாரி சாஜி கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றறனா்.

கேரளத்தில் செயல்பட்டுவரும் ‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்கள், இந்த ஆண்டில் இதுவரை சுமாா் ரூ.630 கோடி நிதியைத் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை திரட்டப்பட்ட நிதியைக் காட்டிலும் இது 18 சதவீதம் அதிகமாகும். எா்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் தமது தலைமையகத்தை அமைக்க பெரிதும் ஆா்வம் காட்டுகின்றறன. 59 சதவீத ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் இந்த நகரங்களில் தலைமையகத்தைக் கொண்டிருக்கின்றறன. கொச்சியில் 36 சதவீதமும், திருவனந்தபுரத்தில் 23 சதவீதமும் உள்ளன. கேரளத்தில் பெண்களால் தொடங்கப்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் 5 சதவீதம் மட்டுமே என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள தகவல்தொழில்நுட்பத் துறை செயலா் எம்.சிவசங்கா் கூறுகையில், ‘கேஎஸ்யுஎம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறறது. அதன்படி, மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் 200 ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான ஆதரவையும் அந்நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறறது. அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடுகளைத் திரட்ட கேரள அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது’ என்றறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT