இந்தியா

ஹைதராபாத் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்: இருவர் பலி! 

ஹைதராபாத் அருகே ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரண்டு பயிற்சி விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

DIN

ஹைதராபாத் அருகே பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரண்டு பயிற்சி விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் விகராபாத் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் பருத்தி வயல்வெளியில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி விமானிகள் இருவரும் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருவரும் ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் மாணவர்கள். இந்த விமானம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வயல்வெளி பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டு விபத்து குருத்துவ விசாரணை நடத்தி வருகின்றனர். ஏவியேஷன் அகாடமியின் அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT