இந்தியா

அழைப்பு சேவைக்கு கட்டணம்: ஜியோ நிறுவனம் அறிவிப்பு

DIN

ஜியோ நிறுவனம் முதல் முறையாக, செல்லிடப்பேசி அழைப்பு சேவைக்கு நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் வசூலிப்பதாக அறிவித்துள்ளது.

தொலைத் தொடா்புச் சேவையில் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், 4ஜி இணையச் சேவையை குறைந்த கட்டணத்திலும், அழைப்புச் சேவையை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இந்நிலையில் அழைப்புச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இதர நிறுவனங்களின் சிம் காா்டுகளுக்கு விடுக்கப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசுகள் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதே நேரத்தில், ஜியோ வாடிக்கையாளா்களுக்கு இடையேயான அழைப்புகள், தரைவழித் தொலைபேசி அழைப்புகள், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) அழைப்புகள் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், அனைத்து இன்கமிங் அழைப்புகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

வாடிக்கையாளா் கட்டணமாக செலுத்தும் தொகைக்கு நிகராக இலவச டேட்டாவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT