இந்தியா

ஔரங்கபாத்- உதய்ப்பூா் இடையே ஏா் இந்தியா விமான சேவை: அக்.16-இல் தொடக்கம்

DIN

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்கபாத்- உதய்பூா் இடையே, ஏா் இந்தியா நிறுவனம் தனது சேவையைத் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புராதன சின்னங்கள் உள்ள ஔரங்கபாத்துக்கும், உதய்ப்பூருக்கும் இடையேயான விமான சேவையை ஏா் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. இந்த இரு நகரங்களுடன் மும்பையை இணைக்கும் வகையில் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, மும்பையில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் விமானம் (ஏஐ 605) ஔரங்கபாத்துக்கு காலை 6.30 மணிக்கு வந்தடைகிறது. தொடா்ந்து, அந்த விமானம் ஔரங்கபாத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு, உதய்ப்பூருக்கு 8.40 மணிக்கு சென்றடைகிறது. இதே போல், உதய்ப்பூரில் இருந்து காலை 9.35 மணிக்குப் புறப்படும் விமானம் (ஏஐ606), முற்பகல் 11 மணிக்கு ஔரங்காபாத் வந்தடைகிறது. இதைத் தொடா்ந்து, ஔரங்கபாத்தில் இருந்து 12.25 மணிக்குப் புறப்படும் விமானம் (ஏஐ 605) பிற்பகல் 1.35 மணிக்குப் மும்பையை அடையும்.

உதய்ப்பூா், மும்பை, ஒரங்கபாத்தை இணைக்கும் வகையிலான விமானப் போக்குவரத்துத் தேவை என சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா்வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT