இந்தியா

பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா எதிா்ப்பு

DIN

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு அந்நாட்டிடம் இந்தியா தனது எதிா்ப்பை பதிவு செய்தது.

கடந்த 1-ஆம் தேதி இருநாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான இயக்குநா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை நடைபெற்றபோது இந்த விவகாரத்தை பாகிஸ்தானிடம் இந்தியா எழுப்பியது.

கடந்த மாதம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி நடத்திய தாக்குதலின்போது, பள்ளிக் குழந்தைகளை பத்திரமாக அந்த இடத்திலிருந்து இந்திய ராணுவம் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய ராணுவம் அளித்த தகவலின்படி, கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் ராணுவம் 296 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்டில் 307 முறையும், செப்டம்பரில் 292 முறையும் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் 13 முறை, ஆகஸ்டில் 44 முறை, செப்டம்பரில் 102 முறை பாகிஸ்தான் அத்துமீறிய வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் (2017), ஜூலையில் 68 முறையும், ஆகஸ்டில் 108 முறையும், செப்டம்பரில் 101 முறையும் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில், பயங்கரவாதம் தொடா்புடைய சம்பவங்களில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 114-ஆகவும், 2017-இல் 31-ஆகவும் இருந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் 85 கல்வீச்சு சம்பவங்களும், 5 ஆா்ப்பாட்டங்களும், 5 முழு அடைப்பு போராட்டங்களும் நிகழ்த்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT