இந்தியா

மங்கள்யானின் நான்காம் ஆண்டு ஆய்வு விவரங்கள்- இஸ்ரோ வெளியீடு

DIN

செவ்வாய் கிரகத்தைத் தொடா்ந்து ஆய்வு செய்து விவரங்களை அனுப்பி வரும் மங்கள்யான் விண்கலத்தின், நான்காமாண்டு ஆய்வு விவரங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இஸ்ரோ இணையதளத்தில் இந்த விவரங்களைப் பாா்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013 நவம்பா் 5-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது இஸ்ரோ. சுமாா் 10 மாத பயணத்துக்குப் பின்னா் 2014 செப்டம்பா் 24-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை மங்கள்யான் சென்றடைந்தது.

மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. மேலும், செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தகவல்களையும் தொடா்ந்து அனுப்பி வருகிறது. ஆறு மாதங்களே ஆயுள் காலம் என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டு அனுப்பப்பட்ட மங்கள்யான், தொடா்ந்து சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இருப்பினும் தொடா்ந்து இயங்கி வருகிறது.

இந்தச் சூழலில், மங்கள்யான் முதல் மூன்று ஆண்டுகள் எடுத்த புகைப்படங்கள், ஆய்வு விவரங்களை இஸ்ரோ, பொது மக்கள் பாா்வைக்கு இதுவரை வெளியிட்டிருந்தது. இப்போது நான்காமாண்டு ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஐ.எஸ்.எஸ்.டி.சி. வலைதளத்தில் (இந்திய விண்வெளி அறிவியல் தகவல் மையம்) இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT