இந்தியா

வட்டியில்லா பயிர்க்கடன்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

DIN


ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஹரியாணா மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது. 

அதில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:

  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டியலின சமூகத்தினருக்கு ரூ. 3 லட்சம் வரை அடமானம் இல்லாக் கடன் வழங்கப்படும்.
  • 25 லட்ச இளைஞர்களுக்கு ரூ. 500 கோடி செலவில் திறன் பயிற்சியளிக்கப்படும்.
  • 2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
  • 2000 சுகாதார மையங்கள் அமைக்கப்படும். 
  • மாநிலத்தில் விளையாட்டுப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
  • ஹரியாணா காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
  • விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT