இந்தியா

ரூ. 20 லட்சம் பணம், பரிசாக ஒரு தீவு... ஒரே நாளில் மாறிய இந்திய இளைஞரின் வாழ்க்கை...

DIN


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிராண்டன் லோபஸ் (Brendan Lopez) 27 வயது இளைஞர் ஒருவர் துபையில் எமிடேர்ஸ் (Emirates NBD) வங்கி நடத்திய போட்டியில் பங்கெடுத்து வெற்றிபெற்று கனடா Nova Scotia வில் 2.42-ஹெக்டேர் உள்ள ஒரு தனித் தீவை பரிசாக வென்றுள்ளார்.

துபையில் குடும்பத்துடன் வசித்துவரும் இவர், புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பணியாற்றிய நிறுவனம் மூடப்பட்டதால் அவர் வேலையிழந்தார். அதன்பின் பகுதி நேரமாக பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.

துபையில் சிறிய வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த இவர், லைஃப்ஸ்டைல் வங்கி நடத்திய போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். லிவ்பேங்க் என்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வங்கி, தங்களது சேவைகளை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து நடத்திய இந்த போட்டியில் இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரிச்சர்ட் ப்ராட்சன் போன்ற Richard Branson பெரும்பணக்காரர்கள் மட்டுமே தீவு வைத்துள்ள நிலையில் இதை நம்ப முடியவில்லை என்கிறார்.

இதனையடுத்து இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் பணமும், கனடா அருகே 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவும் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மலைகள், கடற்கரைகள் நிறைந்த இந்த தீவினை சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாற்றியமைக்க போவதாகவும், மேலும் இந்தியர்களின் ஆடம்பர திருமணங்களை நடத்தும் ஒரு இடமாக மாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT