இந்தியா

எனது கணவர் படுகொலையில் உரிய நீதி கிடைக்காவிட்டால் மகன்களுடன் தீக்குளிக்கப் போகிறேன்: கமலேஷ் மனைவி பரபரப்பு

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், லக்ளெவில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரி (45) படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘லக்ளெனவின் குா்ஷெத் பாக் பகுதியிலுள்ள தனது வீட்டில் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, 3 பேரை தேடி வருகிறோம். அவா்களில் இருவா், முகமது முஃப்தி நயீம் காஸ்மி, இமாம் மெளலானா அன்வருல் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இச்சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கை விசாரிக்க சிறப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா். கமலேஷ் திவாரி கொலைக்கு, அகில பாரதிய ஹிந்து மகாசபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனது இரு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கமலேஷ் மனைவி கிரண் தெரிவித்துள்ளார். தனது கணவர் மரணத்தில் அரசு அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டது. கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்து பாதுகாப்பு வழங்கக் கோரியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே எனது கணவரின் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், எனது இரு மகன்களுடன் நானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கிரண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கமலேஷ் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவரது இரு மகன்களுக்கும் அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கமலேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர வேண்டும் அதுவரை அவரது உடலை நாங்கள் எடுக்கப்போவதில்லை என கமலேஷின் உறவினர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT