இந்தியா

கனமழை எதிரொலி: கேரளாவில் 2 நாட்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுப்பு

கேரளாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டல பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. 

இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அடுத்த பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பந்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லம், ஆலப்புழா, பந்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கூடு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி காரணமாக கொச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT