இந்தியா

குழந்தை சுஜித்தை விரைவில் மீட்க பிரார்த்திக்கிறேன்: ராகுல் காந்தி

DIN


ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை விரைவில் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பிரார்த்திப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவில்,

"நாடே தீபாவளியைக் கொண்டாடி வரும் இத்தருணத்தில், தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர் விரைவில் மீட்கப்பட்டு, நிலைகுலைந்து இருக்கும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 40 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு மூலமாக மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது அதற்கு அருகே மற்றொரு குழி துளையிடப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது 88 அடி ஆழத்தில் இருக்கிறது. அருகாமையில் குழியைத் துளையிடுவதன் மூலம், குழந்தை மேற்கொண்டு ஆழத்திற்குச் செல்லாமல் இருக்க ஏர் லாக் மூலம் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. 98 அடி ஆழத்தில் அருகாமையில் குழி தோண்டி, அதன் வழியாக தீயணைப்பு வீரர்கள் நுழைந்து குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT