இந்தியா

சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்கும் நீதிமன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவு

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உடநிலை குறித்த அறிக்கையை நவம்பர் 1ம் தேதி தாக்கல் செய்யுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்கும் மருத்துவக் குழுவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரைப்பை குடல் சிறப்பு மருத்துவ நிபுணர் நாகேஸ்வர ரெட்டியையும் இணைக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சிதம்பரத்தின் உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT