ஆந்திர அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நர லோகேஷ் 
இந்தியா

கைது நடவடிக்கைகளால் மட்டும் எங்களை கட்டுப்படுத்திவிட முடியாது: சந்திரபாபு நாயுடு முழக்கம்

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

DIN

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து பேரணி நடத்த தெலுங்கு தேசம் கட்சி புதன்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மகன் நர லோகேஷ் உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பேரணி மற்றும் வீட்டுக்காவல் தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது,

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. நான் இந்த அரசையும், காவல்துறையையும் எச்சரிக்கிறேன். இதுபோன்ற பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவது அநியாயமானது. கைது நடவடிக்கைகளால் மட்டும் எங்களை கட்டுப்படுத்திவிட முடியாது. நான் விடுவிக்கப்பட்ட உடன் முன்பே கூறியது போன்று பேரணியை தொடருவேன் என்றார்.

மகன் நர லோகேஷ் கூறுகையில், 

இது ஆளும் ஆந்திர அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது. ஜனநாயகத்துக்கு எதிராக நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம். போலீஸ் ஆதரவை பெற்றுக்கொண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கின்றனர்.

நாங்கள் ஜனநாயக முறையில் எங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை முடக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது. இது ஜனநாயகப் படுகொலையாகும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

SCROLL FOR NEXT