இந்தியா

நாடு தழுவிய பொது சிவில் சட்டம் இல்லை: உச்சநீதிமன்றம் வேதனை

DIN


நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை வகுப்பதற்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவாவில் சொத்து பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று, நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருந்தா போஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
கோவாவில் கடந்த 1867-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போர்ச்சுகீசியர் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டம், கோவாவைச் சேர்ந்த அனைவருக்கும் சில உரிமைகளை வழங்கி, அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது.
அனைத்து மாநில அரசுகளும், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு பொது சிவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பொது சிவில் சட்டம் இயற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில், பொது சிவில் சட்டம் அமலில் உள்ள ஒரே மாநிலமாக கோவா உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT