இந்தியா

போக்குவரத்து விதிமீறல்: லாரி உரிமையாளருக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம்

ஒடிஸாவின் சாம்பல்பூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி லாரி ஓட்டியதற்காக நாகாலாந்து லாரி உரிமையாளருக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN


ஒடிஸாவின் சாம்பல்பூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி லாரி ஓட்டியதற்காக நாகாலாந்து லாரி உரிமையாளருக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலம் சாம்பல்பூர் பகுதியில் வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாகாலாந்து மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரியிடம் சோதனை மேற்கொண்டபோது, அது பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, இந்த விதிமீறல் காரணமாக அந்த லாரியின் உரிமையாளருக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான ரசீதை, லாரி ஓட்டுநர் திலிப் கர்தா மற்றும் லாரி உரிமையாளர் சைலேஷ் சங்கர் லால் குப்தா ஆகியோருக்கு சாம்பல்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வழங்கியுள்ளார். 

ஆனால், இந்த அபராதம் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. காரணம், இந்த அபராதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி விதிக்கப்பட்டது. ஆனால், இவ்விவகாரம் இன்று தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஒடிஸா மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ், ஜூலை 21, 2014 முதல் செப்டம்பர் 30, 2019 வரை சாலை வரி செலுத்தாமல் லாரியை இயக்கியதற்கு ரூ. 6,40,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரி ஓட்டியதற்கு, பொதுவான குற்றத்திற்கு ரூ. 100, விதிமீறல், உத்தரவுகளைப் பின்பற்றாததற்கு ரூ. 500, சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஒலி மாசுக்கு ரூ. 1000 மற்றும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியதற்கு ரூ. 5000, இன்சூரன்ஸ் இல்லாமல் ரூ. 1000 என மொத்தம் ரூ. 6.53 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT