இந்தியா

சிறையில் 74-ஆவது பிறந்த நாளைக் கழித்த சிதம்பரம்

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,  திங்கள்கிழமை தனது 74-ஆவது பிறந்த நாளை சிறையில் கழித்தார்.
இந்த வழக்கில் கடந்த 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிதம்பரத்தின்  74-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்கள் அனைவருக்கும் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாக, அவரது குடும்பத்தினர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது நண்பர்கள், நலம் விரும்பிகள், கட்சியினர் ஆகியோர் எனக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு 74 வயதாகிவிட்டது என்று அனைவரும் நினைவுபடுத்தினர். ஆனால், நான் மனதளவில் 74 வயது இளைஞனாக உள்ளேன். என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. 
நாட்டின் பொருளாதாரம் குறித்துதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மைனஸ் 6.05 சதவீதமாக இருந்தது. நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டை வளமாக மாற்ற கடவுள் அருள் புரியட்டும் என்று சிதம்பரம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து: ப.சிதம்பரத்துக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் ஆகியோரும், காங்கிரஸ் மகளிர் அணியினரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.  "பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயலுக்கு ப.சிதம்பரம் பலியாக மாட்டார்; இந்த அக்னிப்பரீட்சையில் வெற்றி பெற்று அவர் மீண்டு வருவார்' என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT