இந்தியா

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி 4% குறைந்தது

DIN

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 4 சதவீதம் குறைந்து, 18.93 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 19.67 மில்லியன் டன்னாக இருந்தது.

பருவ மழை நன்றாக பெய்ததால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அனல் மின் உற்பத்திக்கான மூலப் பொருளான நிலக்கரிக்கு தேவை குறைந்தது. இதனால், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவும் குறைந்துவிட்டது. 

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை நிலக்கரி இறக்குமதி 13.4 சதவீதம் அதிகரித்து 60.97 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 53.76 சதவீதமாகவே இருந்தது.

இரும்பு உருக்காலைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் இறக்குமதி ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சற்று அதிகரித்து 17.73 மில்லியன் டன்னாக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT