அசோக் லேலண்ட் நிறுவனம் 
இந்தியா

தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சி: மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்தது அசோக் லேலண்ட் 

தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சியின் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.

DIN

சென்னை: தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சியின் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.

முன்னதாக அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தனது வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பினை இம்மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், ஓசூர் ஆலையில் 1 & 2 பிரிவுகளில் 5 நாட்களும், ஆல்வார் மற்றும் பாந்த்ரா ஆலைகளில் 10 நாட்களும், பாண்டாநகர் ஆலையில் 18 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்களது.

இந்நிலையில் தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சியின் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.

அதன்படி  செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1, 8 மற்றும் 9 ஆகிய ஐந்து தேதிகள் வேலையில்லா நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள வேலையில்லா நாட்களில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT