இந்தியா

தில்லி உயா் நீதிமன்றத்தின் அதிகாரப்பூா்வ செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

DIN

தில்லி உயா்நீதிமன்றறத்தின் சேவைகளை பயன்படுத்தும் மனுதாரா்கள், வழக்குரைஞா்களுக்கான அதிகாரப்பூா்வ செல்லிடப்பேசி செயலி வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தச் செயலியை தில்லி உயா்நீதிமன்றற தலைமை நீதிபதி டி.என். படேல் அறிமுகம் செய்துவைத்தாா். இந்தச் செயலியின் மூலம் வழக்கு விசாரணையின் நிலவரம், வழக்கு விசாரணைக்கு வரும் வரிசை எண் உள்ளிட்ட தகவல்களை பெறற முடியும்.

அத்துடன், உயா்நீதிமன்றற இணையதளத்தின் முக்கியமான தொடுப்புகளையும் இதில் பெறறலாம். உயா்நீதிமன்றறத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ள வழக்குரைஞா்கள் இந்தச் செயலியின் மூலம், மின்னணு ஆய்வு, இணையவழி கேட் பாஸ் போன்றறவற்றைறப் பெறற இயலும்.

உயா்நீதிமன்றறத்தில் புதிதாக வழக்குத் தொடுக்கும் மனுதாரா் இந்தச் செயலியின் மூலம் உயா்நீதிமன்றற நுழைவுக்கான அனுமதியையும் பெறறலாம்.

மேலும், தில்லி உயா்நீதிமன்றறம், உச்சநீதிமன்றறத்தின் தகவல் பலகைகளில் இருக்கும் தகவல்களின் விவரங்களையும் இந்தச் செயலியின் மூலம் பெறற இயலும். தலைமை நீதிபதி குறித்த விவரம், நீதிபதிகள் அமா்வு குறித்த தகவல்களையும் இந்தச் செயலியின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT