முகப்பு
இந்தியா

தென்னிந்திய பாணி..! வயநாடு தொகுதியில் வேட்டிகட்டுடன் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல்!

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Updated On : 4 ஏப்ரல், 2019 at 12:02 PM
பகிர்:

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு, ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் தேர்தல் அலுவலகத்துக்கு சாலை மார்க்கமாக பேரணியாக சென்றார். வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல், தேர்தல் அதிகாரியிடம் காலை 11:45 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அப்போது தென்னிந்திய பாணியில் வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்திருந்தார். முன்னதாக, தென்னிந்திய மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே கேரளாவில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது ராகுல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், 2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.