கொல்கத்தாவில் ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 980 பேர் கைது
கொல்கத்தாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 200 கரோனா தொற்று பரவியுள்ள நிலையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனாவை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முயற்ச்சிவரும் நிலையில், பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரத்தில் தடை உத்தரவை மீறிச் செயல்பட்டதாக சுமார் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தா தலைமைக் காவலர் அனுஜ் சர்மா கூறுகையில்,
ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு, உத்தரவு மீறல் தொடர்பாக ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படுவார்கள்.
சரியான அனுமதி மற்றும் காரணங்கள் இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம். ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தயவுசெய்து ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து, ஒத்துழைக்க வேண்டும் என்று டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.