தொல்லைப்படுத்தும் அழைப்புகள்: செல்போனை அணைத்து வைத்த முன்னாள் முதல்வர்
தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தனது செல்போனையே அணைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
போபால்: தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தனது செல்போனையே அணைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடந்த நான்கைந்து நாட்களாக தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதுபற்றி மாநில டிஜிபி மற்றும் அலைபேசி நிறுவனத்திடம் புகார் அளித்தும் பயனில்லை. எனவே நான் எனது அலைபேசியை அணைத்து வைத்து ட்டேன். ஆனால் என்னை போபாலில் உள்ள எனது வீட்டு லேண்ட்லைன் எண்ணில் அழைக்கலாம்.
Advertisement
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்பில்லாத நபர்கள் அவரை அலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதால்தான் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று திக்விஜய் சிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.