மாநிலங்களுக்கு 11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல்
மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாமாநிலங்களுக்கு 11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல்
மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
கரோனா பாதித்த மாநிலங்களின் முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வழியாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
அப்போது தமிழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவா் பேசினாா்.கரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்னதாகவே விடுவிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா்.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.11,092 கோடி மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக தரப்படுகிறது.