முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

குல்காமில் உள்ள ஹார்ட்மண்ட்குரி என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கும் சனிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்று வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் தீவிரவாதிகள் சுடத் தொடங்கினர். இரண்டு தரப்பிலும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது. 

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.