முகப்பு
இந்தியா

ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது: உத்தவ் தாக்கரே

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு தளர்த்தப்படுவது மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பில்தான் உள்ளது 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

மும்பை: கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு தளர்த்தப்படுவது மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பில்தான் உள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது, அரசு கொடுக்கும் அறிவுறுத்தல்களை மக்கள் மிகச் சரியாக பின்பற்றி நடந்து, நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பில்தான் இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், அடுத்த உத்தரவு வரும் வரை, எந்த விதமான மத வழிபாடுளை நடத்தவோ அல்லது விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.