விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றவருக்கு கரோனா: மருத்துவர்கள் உட்பட 92 பேர் தனிமையில் வைப்பு
விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் டிஒய் பட்டீல் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 92 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
புணே: விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் டிஒய் பட்டீல் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 92 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் மார்ச் 31ம் தேதி விபத்தில் சிக்கினார். அவருக்கு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட நிலையில் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக டிஒய் பட்டீல் மருதுவமனையின் டீன் ஜிதேந்திர பவால்கர் கூறினார்.
உடனடியாக அவர் கரோனா பாதித்தவர்களுக்கான சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 42 பேர், 50 மருத்துவப் பணியாளர்கள் என 92 பேரை தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.