ஒளியேற்றுவதற்குப் பதில் துப்பாக்கியால் சுட்ட பாஜக தலைவர்: காவல் துறையினர் வழக்குப்பதிவு
உத்தரப் பிரதேசத்தில் ஒளியேற்றுவதற்குப் பதிலாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாஒளியேற்றுவதற்குப் பதில் துப்பாக்கியால் சுட்ட பாஜக தலைவர்: காவல் துறையினர் வழக்குப்பதிவு
உத்தரப் பிரதேசத்தில் ஒளியேற்றுவதற்குப் பதிலாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஒளியேற்றுவதற்குப் பதிலாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒற்றுமை ஒளியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியே வந்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒளியேற்றினர். சிலர் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்று பட்டாசுகள் வெடித்தனர்.
இதில், உத்தரப் பிரதேசம் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த பாஜக பெண் தலைவர் மஞ்சு திவாரி இன்னும் ஒருபடி மேலே போய் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இந்த விடியோ திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது.
இந்நிலையில், மஞ்சு திவாரிக்கு எதிராக பல்ராம்பூர் பகுதியில் உள்ள கோத்வாலி நகர் காவல் நிலையத்தில் இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மஞ்சு திவாரி தெரிவிக்கையில்,
"மொத்த நகரமும் மெழுகுவர்த்தியாலும், விளக்குகளாலும் ஒளிர்ந்ததைப் பார்த்தேன். நான் இதை தீபாவளிபோல் உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன். எனது தவறை நான் ஒப்புக்கொள்கிறேன், அதற்காக மன்னிப்பும் கோருகிறேன்" என்றார்.