தில்லியில் மேலும் 20 பேருக்கு கரோனா: அரவிந்த் கேஜரிவால்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கரோனா பாதித்த நோயாளி ஒருவர் மரணம் அடைந்திருப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கரோனா பாதித்த நோயாளி ஒருவர் மரணம் அடைந்திருப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், தில்லியில் இதுவரை 523 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 330 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
கரோனா பாதித்தவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 8 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரு லட்சம் மருத்துவப் பரிசோதனை சாதனங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.