தப்லீக் மாநாட்டுக்குத் தொடர்புடைய 25,500 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிப்பு
தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 25,500 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு
தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுமார் 25,500 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புண்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில்,
இந்த அமைப்பின் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஹரியாணாவில் கிராமங்களில் தங்கியிருந்ததால், அங்குள்ள ஐந்து கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வசிப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த அமைப்பின் வெளிநாட்டைச் சேர்ந்த 1,750 பேரை இந்திய அரசு கறுப்புப் பட்டியலில் இட்டுள்ளது." என்றார்.