இந்தியா

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

DIN

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக பொதுத்தேர்வு தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பல்வேறு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், ஜே.இ.இ., யுஜிசி நெட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்றும் இந்தத் தேர்வுகளுக்கான மறுதேதி ஊரடங்கு முடிவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும்  என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT