இந்தியா

ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் மார்ச் மாத எரிபொருள் நுகர்வு 18% சரிவு

DIN

புது தில்லி: கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவின் மார்ச் மாத எரிபொருள் நுகர்வு 18% அளவுக்கு சரிந்துள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகாலமாக எரிபொருள் தேவை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நுகர்வு சரிந்துள்ளது.

இந்தியாவில் மார்ச் மாதத்துக்கான பெட்ரோலியம் பொருட்களின் நுகர்வு 17.79 சதவீதம்  அளவு சரிந்து 16.8 மில்லியன் டன்களாக இருப்பதாக இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகத் தேவை கொண்ட டீசல் தற்போது 24.23 சதவீதம் குறைந்து 5.56 மில்லியன் டன் அளவுக்குக் குறைந்துள்ளது.

நாட்டில் டிரக்குகள் மற்றும் வாகனங்களின் இயக்கம் பெரியஅளவில் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்த அளவுக்கு நாட்டில் எரிபொருள் நுகர்வு சரிந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT