முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கை: 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கரோனா பரவல் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

DIN

கரோனா பரவல் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. மேலும், வருகிற ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தன்மையைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று 19 மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT