இந்தியா

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 365 ஆக அதிகரிப்பு

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. ஆந்திராவில் நேற்று இரவு முதல் மேலும் இரண்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இப்போது 365 ஆக அதிகரித்துள்ளது. 

மாநில சுகாதாரத்துறை அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், ஆந்திரத்தில் 10 நோயாளிகள் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் மீதியுள்ள 349 நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

அதேபோன்று கரோனாவால் ஆந்திரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT