முகப்பு
இந்தியா

கேரளத்தில் 71 வயது முதியவர் கரோனாவுக்கு பலி

கேரளத்தில் 71 வயது முதியவர் கரோனா நோய்த் தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில்

Updated On : 11 ஏப்ரல், 2020 at 10:45 AM
பகிர்:


திருவனந்தபுரம்: கேரளத்தில் 71 வயது முதியவர் கரோனா நோய்த் தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மஹேவில் வசித்துவரும் 71 வயது முதியவர் சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

பின்னர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதன்படி உயிரிழந்தவரின் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 11 பேருக்குச் சோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா இல்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலரின் முடிவுகளுக்குக் காத்திருக்கின்றனர். சிலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மஹே சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

Advertisement

கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.