கரோனா: ஜம்மு- காஷ்மீரில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு
ஜம்மு - காஷ்மீரில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு தேசிய ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனினும், நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அந்த வைரஸால் ஜம்மு காஷ்மீரில் இதுவரை 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர், ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். இத்துடன் ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.