முகப்பு
இந்தியா

புணேயில் காவலருக்கு கரோனா: மகாராஷ்டிரத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,355ஆக உயர்வு

புணேயில் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 18 ஏப்ரல், 2020 at 2:43 PM
பகிர்:

புணேயில் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனாவை எதிா்த்து ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,355 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேசமயம் 69 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில புணேயில் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று தற்போது  உறுதியானது.

Advertisement

மேலும் அவரின் மனைவியும் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளார். இந்த தகவலை புணே காவல்துறை இணை ஆணையர் ரவீந்திரா சிஸ்வே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.