முகப்பு
இந்தியா

தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,767 ஆக உயர்வு

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியா

தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,767 ஆக உயர்வு

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவை எதிா்த்து ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்த நிலையில் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளதாக தில்லி சுகதாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கு இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாக கூறிய அவர் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

42ஆயிரம் விரைவு பரிசோதனை கருவிகளை தில்லி அரசு பெற்றுள்ளதாவும் இந்த கருவிகள் நாளை முதல் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →