முகப்பு
இந்தியா

பத்ராக்கில் மேலும் மூவருக்கு கரோனா உறுதி: ஒடிசாவில் பாதிப்பு 82 ஆனது

ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குப் புதிதாக கரோனா நோய்த்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மூவரும் பசுதேவ்பூர் பகுதியைச் சேர்ந்த 35, 40, 55 வயது உடையவர்கள் ஆவர். இவர்கள் கொல்கத்தாவுக்குப் பயணம் செய்து திரும்பியவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பத்ராக் மாவட்டத்தில் மட்டும் புதிதாக 11 பேருக்கு கரோனா பாதித்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் குணமடைந்துள்ளனர். 

ஒடிசாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 82 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 51 பேர் சிகிச்சையிலும், 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒடிசாவில் இதுவரை 13,775 பேருக்கு சோனை செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் உள்ள 30 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் இதுவரை கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில், கட்டாக், பூரி, கலஹந்தி மற்றும் தெங்கனல் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததைத் தொடர்ந்து புதிதாகப் பாதிப்புகள் இல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.