முகப்பு
இந்தியா

தில்லி மாநாட்டில் பங்கேற்ற 21 வெளிநாட்டினர் உட்பட 25 பேர் கைது

மார்ச் மாதம் புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 21 வெளிநாட்டினர் உட்பட 25 பேரை தாணே காவல்துறை கைது செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:


தாணே: மார்ச் மாதம் புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 21 வெளிநாட்டினர் உட்பட 25 பேரை தாணே காவல்துறை கைது செய்துள்ளது.

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கால அளவு முடிவடைந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சுற்றுலா விசாவில் வந்து சட்டத்தை மீறி தில்லி மாநாட்டில் பங்கேற்றதாக 21 வெளிநாட்டினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தங்க இடம் தந்த குற்றத்துக்காக உள்ளூரைச் சேர்ந்த நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏப்ரல் 1ம் தேதி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.