மொபைல் ரீசார்ஜ், மின்விசிறி, புத்தகக் கடைகள் இயங்கலாம்: மத்திய உள்துறை அமைச்சகம்
மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களுக்கான புத்தகக் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வனத்துறை சார்ந்த பணிகள், விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பணிகளில் சேமிப்புக் கிடங்குகள், ஆய்வகங்கள் இயங்க அனுமதி. மாநிலங்களுக்கு இடையே விவசாயம் சார்ந்த பொருள்கள் கொண்டு செல்ல உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.