முகப்பு
இந்தியா

மருத்துவமனைக்குச் செல்ல உதவிய காவலரின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய தாய்

பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்த தாய்க்கு உதவிய காவலரின் பெயரையே, பிறந்த குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளார் தாய்.

Updated On : 24 ஏப்ரல், 2020 at 6:54 PM
பகிர்:


தில்லி: பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்த தாய்க்கு உதவிய காவலரின் பெயரையே, பிறந்த குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளார் தாய்.

தில்லியில் பிரசவ வலி ஏற்பட்டு, ஊரடங்கு உத்தரவால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணியை, அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர் தயாவீர் சிங், தானே முன் வந்து கர்ப்பிணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார்.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு கரோனா என்றோ, ஊரடங்கு என்றோ பெயர் சூட்டாமல், தனக்கு உதவிய காவலர் தயாவீர் சிங்கின் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளார் தாய்.

Advertisement

இது குறித்து அறிந்த காவலர், இந்த  நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமையாக உள்ளது என்கிறார் தயாவீர் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.