கர்நாடகத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா: பாதிப்பு 463 ஆக உயர்வு
கர்நாடகத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி
கர்நாடகத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது
ஒரே நாளில் 18 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை மொத்தம் 443 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150 பேர் குணமடைந்துள்ளனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,684 கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23,077ஐ எட்டியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
Advertisement