முகப்பு
இந்தியா

ஊரடங்கு பிறப்பிக்காமல் இருந்திருந்தால் கரோனா பாதிப்பு 73,000ஐ தொட்டிருக்கும்: நீதி ஆயோக் உறுப்பினர்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பதாக நீதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஏப்ரல், 2020 at 5:59 PM
பகிர்:

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பதாக நீதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதும், உரிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்தது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று கூறினார்.

மேலும், தற்போது கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆயிரமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், கரோனா பாதிப்பு 73 ஆயிரத்தைத் தொட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.