முகப்பு
இந்தியா

கரோனா: ஜூன் 30 வரை கூட்டம் கூட தடை - யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப்பிரதேசச்சில் வரும் ஜூன் 30 -ஆம் தேதி வரை கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
யோகி ஆதித்யநாத்
பகிர்:

லக்னௌ: உத்தரப்பிரதேசச்சில் வரும் ஜூன் 30 -ஆம் தேதி வரை கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வரும் ஜூன் 30 -ஆம் தேதி வரை கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜூன் 30 -ஆம் தேதி வரை கூட்டம் கூடுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும் நிலைமையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 1,621 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 247 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர், 25 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →